ஆரிய வருணாசிரம அநீதியின்
வெற்று அடையாளங்கள் தான்
நெற்றிக் குறியீடுகளாயின
வெற்று அடையாளங்கள் தான்
நெற்றிக் குறியீடுகளாயின
ஆரிய எதிர்ப்பே திராவிடமென
வெற்று நெற்றி தான்
சுயமரியாதை எனவாகின
இன்றோ திராவிட ஓட்டு
கட்சிக்காரன் நெற்றியெல்லாம்
சிகப்பு வெள்ளை எனவாயின
திராவிட கட்சிதான் நம்புங்களென
பல் இளிக்கும் பரதேசிகளை கண்டு
வெட்கமே வெட்கும்படியாகின
இம்மானங்கெட்ட மண்டையர்களுக்கு
மதி புகட்ட இயலாமல்
சிலையின் கைதைடியும் அனலாகின
- கலகன் (02/03/2018)
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை தெரிய படுத்தவும்! நன்றி!