Wednesday, 21 March 2018

நாத்திகர்கள் வீட்டு பெண்கள் கோவிலுக்கு போவது தடுக்காதது ஏன்?

கேள்வி: நாத்திகர்கள் வீட்டு பெண்கள் கோவிலுக்கு போவது தடுக்காதது ஏன்? சமஸ்கிருத வேதத்தில், வேதத்தை நம்பாதவர்கள் நாஸ்திகர்கள் (நாத்திகர்கள்) என்று குறிப்பிடுகிறது. கடவுள் நம்பிக்கைக்கும் நாத்திகத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஒரு கொள்கையை போதிப்பது தான் பகுத்தறிவு. புகுத்துவது அல்ல. கடவுள் இருக்கார் கண்மூடி நம்பு, எதிர் கேள்வி கேட்காதே என்று சொல்வது பக்தி. நானே சொன்னாலும் நம்பாதே, நீ அலசி ஆராய்ந்து முடிவு எடு என்று எல்லா கூட்டத்திலும் சொல்பவர் பெரியார். உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லையே, ஏன் கோயில் கருவறையில் நுழையும் போராட்டம் என்று கேட்டனர். அதற்கு பெரியார், கடவுள் இல்லை என்பது என் நம்பிக்கை. எந்த மனிதனும் கோவிலுக்குள் போகலாம் என்பது அவன் உரிமை. ஒரு சரராசரி மனிதனின் உரிமைக்காக தான் இந்த போராட்டம் என்றார். பெரியார் தான் நடத்திய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இறைவாழ்த்து பாடுவதை தடுத்ததில்லை. நான் சோறு போடுகிறேன் என்பதற்காக அவர்களுக்கு என் கொள்கையை திணிக்க கூடாது என்றார். இப்படிப்பட்ட கொள்கை உடைய பகுத்தறிவாளிகள், தன் வீட்டு பெண்களை, நான் கொண்ட கொள்கையை நீயும் பின் தொடர் என்று பக்திமான்கள் வீட்டில் செய்வது போல் கொடுமை படுத்த மாட்டார்கள். அவரவர் கொள்கைகளை அவரவர் சுயமாக தேர்ந்தெடுக்கட்டும் என்பதுதான் ஜனநாயகம். சுய சிந்தனை சுய அறிவு சுய மரியாதை - அதுதான் பகுத்தறிவு. தலையில் பிறந்தவன் பிராமணன் - தோளில் பிறந்தவன் சத்ரியன் - தொடையில் பிறந்தவன் வைசியன் - காலில் பிறந்தவன் சூத்திரன். இந்த ஐந்துக்கும் கீழ் பஞ்சமன் அவனுக்கும் கீழ் பெண்கள் (பிராமண பெண்கள் உட்பட). இது தான் வேதம் புராணம் மனு தர்மம் சொல்வது. அணைத்து சலுகைகளும் மேல் வர்ணத்தார்க்கு எல்லா இழி நிலைகளும் கீழ் வர்ணத்தார்க்கு. பெண்கள் எந்த வர்ணமாக இருந்தாலும் ஆண்களுக்கு அடிமை சேவை செய்ய வேண்டும். ஒரு கொலை சூத்திரன் செய்தால் அவன் தலையை எடு. அதுவே பிராமணன் செய்தால் அவன் தலை முடியை எடு என்பன போன்ற இவர்கள் உதாரண சட்டங்கள். இந்த கேவலங்களை கேட்டால், எந்த பெண்களுக்காக போராடுகிறமோ அவர்களுக்கே கோவம் வருகிறது. - கலகன் (21-3-2018)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை தெரிய படுத்தவும்! நன்றி!

முக்கிய பதிவுகள்