Sunday, 11 March 2018

பெண் என்னும் பெரியாள்

பெண்ணே!

துப்பட்டா துறப்பதும்
இறுக ஆடை உடுப்பதும்
என் தேகம் தெரிந்தால்
உனக்கென்ன என்பதும் 
உன் உரிமை
பெண்ணியம் அல்ல

சூத்திர பெண்கள்
மேலுடை கூடாதென்ற
ஆதிக்கம் எதிர்த்து
முலை அறுத்து
உயிர் துறந்து
வென்றாள்
தமிழ் மறவச்சி
தன் உடல் மரைச்சி

என் உடல் உனக்கான
காட்சிப்பொருள்
அல்லவென
எதிர்ப்பது தான்
பெண்ணியம்
எதிராளிக்கு தீனி
போடுவதல்ல

ஆணே!

அன்று
நீ மேலுடை கூடாதென்றால்
அணிவேன் என்றாள்
இன்று
நீ உடல் முழுவதும்
மறையென்றால்
முடியாது என்பாள்

அவள் எப்போதும்
நீ வரையும் எல்லை
கோடுகளை தாண்டி
உன் ஆண்ணாதிக்க
சட்ட காகிதத்தை
எரித்து கொண்டே
இருப்பாள்

ஏனெனில் அவள்
பெண் என்னும் 'பெரியாள்'

- கலகன் (11-3-2018)
(கலகம் தொடரும்..)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை தெரிய படுத்தவும்! நன்றி!

முக்கிய பதிவுகள்