Sunday, 11 March 2018

பாரதியின் முகமூடி

நான்: பிராமணன் மீசை வைக்கலாமா?
உனக்கெதற்கு இந்த புரட்சி?
பாரதி: புரட்சியா? மூடனே..
தெவசத்துக்கு மட்டும் தான் சவரம்
பிராமணனுக்கு மீசையில்லையேல்
அது சாஸ்திர விரோதம்
வடபிராமணனிடம் கற்றுக்கொள்

நா: தமிழ் பற்றி?

பா: யாம் கண்ட மொழிகளிலே,
தமிழ் மொழி போல் இனி எங்கு காணோம்.

நா: ஓஹொ.. சமஸ்கிருதம்?

பா: அது தெய்வ பாஷை.
தமிழ் மனித பாஷை.
ஒப்பிட தகுதியில்லை
தமிழுக்கு

நா: சாதிகள்?

பா: ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

நா: ஆயிரம் சாதிகள் இருந்ததினாலே
தான் அந்நியன் எளிதாக நுழைந்தான்?

பா: நால்வர்ணம் நாட்டுநலன்!
நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி

நா: சாதிதான் சமூகம் என்றால்,
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
என்றான் ஒருவன்.. சரி விடு.. மதம்?

பா: மதமாற்றம் தடைசெய்!

நா: ஏன்?

பா: பசித்த பஞ்சம் பஞ்சுகளுக்கும்
பால் பவுடர் கொடுத்து மதம் மாற்றும்
அந்நிய பாதிரிகள்
ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும்
அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது
கோமாமிசம் உண்ணாதபடி
அவர்களைச் சுத்தப்படுத்தி மீண்டும்
நமது இந்து சமூகத்திலே
சேர்க்க வேண்டும்

நா: நடந்தால் தீட்டு தொட்டால்
தீட்டு பார்த்தால் தீட்டு என்று
மனுதர்மம் எழுதி வைத்துள்ள நாட்டில்
அவர்கள் குழந்தைக்கு
பால் கூட புகட்ட முடியாமல்
வக்கற்றவர்களாக வைத்திருந்தது
யார் குற்றம்?

எங்கே ஆளக்கானும்..

ஏய்ய்ய்.. பாரதி ஓடாதே... நில்...
பதில் சொல்..

-கலகன் 3-3-2018

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை தெரிய படுத்தவும்! நன்றி!

முக்கிய பதிவுகள்