Monday, 19 March 2018

சிலையொன்று முளைக்கும்

அடேய்
பிள்ளையார் சிலையை
உடைச்சாரே பெரியார்
அது சரியா?

வியாபாரமாகி போன
விநாயகரை
விலைகொடுத்து
வாங்கி உடைத்தார்

அப்படி பெரியாரின்
சிலை தெருவில்
வியாபாரமாக விற்கும்
நாள் வந்தால்
அன்று நீ வாங்கி உடை

கோவில் சிலையும்
கல்தானே
பெரியார் சிலையும்
கல்தானே
எங்கே போனதுடா உன்
பகுத்தறிவு?

கோவில் சிலையின்
கீழ் பிறப்பு இறப்பு
என ஆண்டு எழுத
வக்கு இருக்கிறதா
உனக்கு?

நாளை எனக்கும்
அபிஷேகம் செய்வான்
என தன் கொள்கையையும்
சிலையில் பதித்தவர்
பெரியார்

சாஸ்திரம் வேதம்
இவற்றை கண்மூடி நம்பு
என்பது கடவுள்
நானே சொன்னாலும்
நம்பாதே
நீ பகுத்தறிந்து
முடிவெடு என்றவர்
பெரியார்

நாத்திக நாயே
செருப்பால்
அடித்தாலும்
உங்களுக்கு
புத்தி வராது?

செருப்பொன்று
விழுந்தால்
அங்கே
சிலையொன்று
முளைக்கும்
அதுதான் பெரியார்
வரலாறு

நீங்கள்
செருப்பால் அடித்தாலும்
மசூதி இடித்தாலும்
சிலைகளை உடைத்தாலும்
பாதிரியாரை எரித்தாலும்
காந்தியை சுட்டாலும்
அதை உங்களுக்கு
திரும்பி செய்ய
எங்களுக்கு
புத்தி வராது

- கலகன் (8-3-2018)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை தெரிய படுத்தவும்! நன்றி!

முக்கிய பதிவுகள்