Sunday, 11 March 2018

போலி பெண்ணியம்

கழுதையே !
என்னக்காக வாழ்நாள் எல்லாம்
பொதி சுமந்தாய்

எனக்கு கால் வலிக்கும் போதெல்லாம்
என்னை சுமந்தாய்

என் குடும்பத்திற்காக
உழைத்து ஓடாய் போனாய்

குடும்ப வறுமையில் நீ பட்டினி
கிடந்தது எனக்கு பால் கொடுத்தாய்

என்ன தவம் நான் செய்திருக்க
வேண்டும் உன்னை பெற

நீ செய்யும் புனிதங்கள் உலகில்
யார் செய்ய முடியும்

இனிய கழுதை தின
வாழ்த்துக்கள்!

சொல்ல மறந்துட்டேன்
முதுகை காட்டு
இதோ இன்றைய மூட்டை

- கலகன் (8-3-2018)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை தெரிய படுத்தவும்! நன்றி!

முக்கிய பதிவுகள்